கடந்த 3 ஆண்டுகளாக கோவையில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இந்த ஆண்டும் வருகிற 21ல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் சாலையில் இந்த முறை நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கவுள்ளது.

இதையடுத்து முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடக்கிறது. இடம் சுத்தம் செய்யும் பணி நேற்று முதல் துவங்கியது. இந்த வருடம் போட்டி நடக்கவுள்ள இடம் சுத்தம் செய்யப்பட்டு, வாடிவாசல் அமைக்கும் பணி மிகு துரித காலத்தில் செய்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Be First to Comment