கோவை ஆவரம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமி இவர் சக்தி சாலை கணபதி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு பின்பு வந்த லாரி முந்தியடிக்க முயன்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த முத்துசாமி மீது மோதியுள்ளது.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது.
இதனால் முத்துசாமி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகர பகுதிக்குள் பகல் நேரத்தில் லாரி இயங்குவதற்கு தடை விதித்துள்ள நிலையில் விதியை மீறி லாரி இயங்கி வருவதால் இது போன்று விபத்து அடிக்கடி நிகழ்வதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment