கோவை மாவட்டம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை இணைந்து பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. வருகிற 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 20 க்கும் மேற்பட்ட கால் டாக்ஸி ஓட்டுனர்கள் தங்களுடைய கால்டாக்சிகளை எடுத்துக் கொண்டு இன்று மாலை 5 மணி அளவில் வ.உ.சி மைதானத்திற்கு வந்தனர். அனைவரும் வரிசையாக தங்களுடைய கால்டாக்ஸியை நிறுத்தி அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.


இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது நாங்கள் அனைவரும் டாக்ஸியை ஒவ்வொரு நிறுவனத்திடமும் வங்கிகளிடம் பைனான்ஸ் அடிப்படையில் எடுத்து தொழில் செய்து வருகிறோம். ஊரடங்கு காரணமாக எங்களுக்கு போதிய வருமானம் இல்லை. அரசு தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை வற்புறுத்தக் கூடாது என கூறி உள்ளது. ஆனால் எங்களுடைய பைனான்சியர் தொடர்ந்து எங்களுடைய கார்களை பறிமுதல் செய்து விடுவதாக மிரட்டி தொடர்ந்து பணம் கேட்டு வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கூறினர்.
Be First to Comment