இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மக்களுக்காக எப்போது அழைத்தாலும் வருவேன் என தெரிவித்தார். திரையுலகை பொருத்தவரை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் 1947 என்ற படத்தில் நடித்து வருவதாகவும், தொடர்ந்து பல்வேறு படங்கள் திரைக்கு வர உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வெள்ளித்திரை அனுபவங்கள் குறித்த கேள்விக்கு மக்களுக்கும், மீடியாவிற்கும் தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என பதிலளித்தார். பெரியார் படிப்பகத்தில் திருமணம் செய்து கொண்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். அஜித் உடன் படம் நடித்து விட்டேன் என தெரிவித்த அவர் விஜயுடன் நடிக்க வேண்டுமென கடவுளை வேண்டி கொள்வதாக தெரிவித்தார்.
Leave a Reply