கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கொடிசிய வளாகம் மற்றும் சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். பின்னர், சிகிச்சை மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளை ஆய்வு செய்தவர், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரிடம் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

கொடிசியா வளாகத்தில் ஏற்கனவே இரண்டு கொரோனா சிகிச்சை மையங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில், சித்த மருத்துவ சிகிச்சைக்கான படுக்கை வசதிகளோடு, கூடுதலாக 473 படுக்கை வசதிகள் கொண்ட இரு சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிகளை வழங்கினர்.
Be First to Comment