கோவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய வார்டை தி.மு.க.விற்கு வழங்க கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தி.மு.க.காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டில் 9 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி 89 வது வார்டு பகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் பரவியதை அடுத்து அந்த பகுதி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க.கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வார்டை ஒதுக்கியதை கண்டித்து சுண்டாக்காமுத்தூர் பகுதி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அந்த பகுதியில் கூடிய தி.மு.க.வினர் தி.மு.க.விற்கு வார்டு ஒதுக்க கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தபடி, தி.மு.க.விற்கு விரோதமாக செயல்பட்ட காங்கிரஸ் நிர்வாகிக்கு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
Be First to Comment