கடந்த 15 நாட்களாக அல்ட்ரா ரெடி மிக்ஸ் கான்கிரீட் நிறுவனம் சார்பில், கோவை மாநகர காவல் துறையினர், ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரித்துறையினர், அச்சு மற்றும் ஊடகத்துறையினர் மற்றும் கேரளா கிளப் உறுப்பினர்கள் இடையே நடந்த இரட்டையர் பேட்மிண்டன் போட்டி, இன்று நிறைவு பெற்றது. இதையொட்டி இன்று கேரளா கிளப்பில் வெற்றி பெற்றோருக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விருதுகளை அல்ட்ரா ரெடி மிக்ஸ் கான்கிரீட் நிறுவனத்தின் தலைவர் சிவசாமி, கேரளா கிளப்பின் தலைவர் அசோக் செயலர் ராஜ்குமார் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கினார்.

இந்த போட்டியில் கேரளா கிளப்பின் பிரபாகரன்/பாலாஜி ஜோடி சிறப்பாக விளையாடி முதல் பரிசை வென்றது. இரண்டாம் பரிசை கேரளா கிளப்பின் கோகுல்/சரவணன் ஜோடியும், மூன்றாம் பரிசை காவல் துறையை சேர்ந்த அருணகிரி/மணிகண்டன் ஜோடியும், நான்காவது பரிசை கேரளா கிளப்பின் தங்கவேலு மற்றும் சிவா ஜோடி கைப்பற்றியது.

விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், இந்த இரட்டையர் பேட்மிண்டன் போட்டியை நடத்துவதன் மூலமாக மக்களுக்கு சேவை செய்யும் பல துறையினர்களை ஒருங்கிணைத்து உள்ளதற்கு, பாராட்டுகளை தெரிவித்தார். கேரளா கிளப் என்பது மலையாளி மக்களுக்காக மட்டுமல்லாமல், அனைத்து மக்களுக்காகவும் செயல்பட்டு வருவதற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
Be First to Comment