பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தின் சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நடைபெறுகிறது. அதன்படி ஏழாவது எடிஷனாக 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக Pride Of Nation 2022 எனும் விருது வழங்கும் விழா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பீனிக்ஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தின் நிறுவனரும்,இளைஞர்களுக்கான யு.என்.தூதுவர் டாக்டர் கிராமிய புதல்வன் கலையரசன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,தேசத்தின் பெருமை,வாழ்நாள் சாதனையாளர்,இளம் சாதனையாளர் என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் கலை,கல்வி,விளையாட்டு,சினிமா,யூடியூப்பர்ஸ்,என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.விழாவில் கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கிராமிய கலை நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது..
Be First to Comment