கோவையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் : துப்பாக்கி சூடு அருணா ஜெகதீஸ் ஆணையம் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை என பரிந்துறை செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். இந்த சம்பவத்தை அதிகாரிகளின் அலட்சியமாக மட்டுமே பார்க்க கூடாது, இது பன்னாட்டு நிறுவனத்திற்கு கைபாவையாக செயல்பட்ட அவர்கள் மீது, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்தில், விபத்தாக நடக்கவில்லை என்றால் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும். சம்பவம் நடந்தவுடன் காவல் துறை டிஜிபி நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்துள்ளார். மேலும் விரைவில் கைது நடவடிக்கை, அவர்களது பின்னனியை கண்டுபிடித்தது பாராட்டதக்கது.

பன்னாட்டு விசாரணை இருப்பதால் தமிழக முதல்வர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துறை செய்தது வரவேற்க தக்கது. பதற்றமான சூழலில் பாஜக பந்த் அறிவிப்பு அவசியமற்றது. இது குறித்து அனைத்து கட்சியினரை அழைத்து பேச ஆட்சியரிடம் கூற உள்ளோம். இம்மாதிரியான சூழலில் அரசியல் கட்சியினர் தீயணைப்பு நிலையங்கள் போல செயல்பட வேண்டும். பதற்றமான சூழலில் பாஜக அறிவித்துள்ள பந்த் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல உள்ளது.
Be First to Comment