கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் வழங்கிய அன்னதானம்.
கோரோனா ஊரடங்கின் காரணமாக உணவின்றி தவிப்போரின் நலனை கருத்தில் கொண்டு பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உணவுப் பொட்டலங்களை வழங்கினார்கள்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.


இந்த நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி, தலைவர் ஹாஜி முஹம்மது ரஃபி,மாவட்ட செயலாளரும் நமது தேடல் கோவை வடக்கு செய்தியாளருமான ஆர்.ஆர்.பூபேஷ்,செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பயனாளிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமுக இடைவெளியை கடைப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment