கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்ட பணிகளை உடனே துவக்க வேண்டும். பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன வசதியின் கரையோர விவசாயிகளின் கோரிக்கைகளை, உடனடியாக நிறைவேற்று வேண்டும். விவசாயிகளின் கிணற்றில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க கூடாது எனவும்,

அதே போல மழைக்காலங்களில் நீர் திறப்பு பாசன கால்வாயை தவிர்த்து, மற்ற பாசன கால்வாயில் உள்ள குலம் குட்டையை நீர் நிரப்ப ஆவணம் செய்ய வேண்டும். தண்ணீரை தவறாக பயன்படுத்தும் நபர்களை அடையாளம் கண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Be First to Comment