பா.ஜ.க அரசை கண்டித்து கோவை மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களி்ல் தி.மு.க-வினர் மற்றும் தோழமை கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை இரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டு கேட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிட கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதி தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவைகள் இணைந்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி கண்டன கோசங்களை எழுப்பினர்.
பா.ஜ.க அரசு மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாவும் அதனை கண்டித்தும், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க நாடு முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் பா.ஜ.க அரசிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது.
பா.ஜ.க அரசை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கோவை மாவட்டம் முழுவதும் தி.மு.க-வினர் அவர்களது வீடுகளில் கருப்பு கொடி கட்சி, பா.ஜ.க அரசிற்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் பீளமேடு அண்ணாநகரில் உள்ள தனது அலுவலகத்தில் கருப்பு கொடி கட்டி, கருப்பு கொடியை கையில் ஏந்தி ஒன்றிய அரசிற்கு எதிராக கோசங்களை எழுப்பினார்.
பீளமேடு அண்ணாநகர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் கருப்பு கொடி கையில் ஏந்தி ஒன்றிய அரசிற்கு எதிராக கோசங்களை எழுப்பினார்.
இதேபோல், பீளமேட்டில் உள்ள தனது இல்லம் முன்பு முன்னாள் அமைச்சரும், தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினார். இதில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அண்ணாநகர் நிகழ்வில், பகுதி கழக பொறுப்பாளர் வே.பாலசுப்பிரமணியன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் புதூர் மணிகண்டன், ஆ.கண்ணன், அணிகளின் அமைப்பாளர்கள் அக்ரி பாலு, விஜி.கோகுல், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் தி.மு.க நிர்வாகியான விஷ்ணு பிரபு தலைமையில் அவரது இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தி.மு.க மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சுந்தர் , இலக்கிய அணி சிங்கை பகுதி துணை அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் தேவராஜ் ,சுப்பிரமணி, சந்தோஷ், கண்ணன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment