மாநகராட்சி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் கோவையில் நடைபெற்றது. கோவையில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனிடையே, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக கோவையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டுள்ளது.
சித்தாபுதூர் அரசு மாநகராட்சி பள்ளியில் இன்று நடைபெற்ற முகாமில் ஆசிரியர்கள் பலரும் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை 4 மணி வரையில் நடைபெறும் இந்த முகாதில் 500 ஆசிரியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment