கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உழவர் சந்தை முன்பு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் பராமரிப்பு கோட்டம் சாலையை அகலப்படுத்த, மேம்பாடு செய்தல் பணியை 2 கோடியே 21 லட்சம் மதிப்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “கோவை மாநகராட்சியில் 63 நகர் நல மையங்கள் பணிகள் நடைபெறுகிறது. இது கோவை மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக உள்ளது. முதல்வர் கோவை மாவட்டம் வளர்ச்சி அடைய இந்த சிறப்புத் திட்டத்தை வழங்கியுள்ளார்.
கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலைகள் பழுதடைந்துள்ளது.
ஏற்கனவே 198 கோடிக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்று ஒரு நாளில் மட்டும் 113 கோடியே 27 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள், நகர்நல கட்டிட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என முதல்வர் கட்டளையிட்டுள்ளார்” என்றார்.
Be First to Comment