பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களின் உலக சாதனைகளை பதிவு செய்து, அவர்களை சாதனையாளர்களாக பதிவு செய்து வருகிறது பீனிக்ஸ் உலக சாதனை புத்தகம். இந்நிலையில், பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நடைபெறுகிறது. அதன் படி எட்டாவது எடிஷனாக பீனிக்ஸ் அவார்ட்ஸ் எனும் விருது வழங்கும் விழா போத்தனூர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. பீனிக்ஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தின் நிறுவனரும்,இளைஞர்களுக்கான யு.என்.தூதுவர் டாக்டர் கிராமிய புதல்வன் கலையரசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கன்னங்குறிச்சி தினேஷ்,எஸ்.எம்.மோட்டார் நிறுவன தலைவர் சுரேஷ்,தங்கப்பட்டறை உரிமையாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பிரைட் ஆப் நேஷன்,,இளம் சாதனையாளர்,வாழ்நாள் சாதனையாளர்கள் என கலை,கல்வி,விளையாட்டு,சினிமா,யூடியூப்பர்ஸ்,என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.இதில் தமிழகத்தின் பல்வேறு சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கிராமிய கலை நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது..
Be First to Comment