கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த பேரறிவாளனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் விடுதலை கொடுத்துள்ள நிலையில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விடுதலைக்காக உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை வந்துள்ள பேரறிவாளன் இன்று காலை கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு ராமகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

பின்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் காந்திபுரத்தில் ஒன்று கூடினர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பேரறிவாளனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பேரறிவாளன் செய்தியாளர்களிடையே ”முப்பத்தி ஒரு ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்கு நன்றி கூறி வந்திருக்கிறேன். இந்த வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் காட்டிய அக்கறைக்கும் நன்றி தெரிவிக்க கோவைக்கு வந்து இருக்கிறேன். எனது விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்துக்கட்சி நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு நன்றி.”
Be First to Comment