Press "Enter" to skip to content

கோவையில் ப.சிதம்பரம் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஹரிஹரசுதன்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் 76 பிறந்த நாளை காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஹரிஹரசுதன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
முன்னதாக, கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது .தொடர்ந்து எழுபத்தி ஆறு தூய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடை மற்றும் உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் எம்.என்.கந்தசாமி கோவை செல்வன், சரவணகுமார், முன்னாள் மேயர் வெங்கடாசலம், மகேஷ் குமார், ஷோபனா செல்வன், காயத்ரி, கணபதி சிவகுமார், சௌந்தர குமார், மதியழகன், டென்னிஸ் செல்வராஜ், ஜெர்ரி லூயிஸ், ராகவன், அரிமா ஆறுமுகம், பார்த்திபன், வெள்ளைச்சாமி, காமராஜ் துல்லா, இமயம் ரகமத்துல்லா, சண்முகம், ஜமாலுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks