இந்திய தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவ அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு, கோவையில் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள்,செவிலியர்கள்,தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்ட வாக்கத்தான் நடைபெற்றது.உடல்நிலை மிகவும் சரியில்லாத மற்றும் கடுமையான நோய்வாய்ப்பட்டவர்கள்,சாலை விபத்தில் காயமடைந்த நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிப்பதில், தீவிர சிகிச்சை பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரிவில் பணியாற்றும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களை இணைத்து,இந்திய சொசைட்டி தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த அமைப்பின் நிறுவன நாளை கொண்டாடும் விதமாக, இந்திய தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பு கோவை கிளை சார்பாக சேவ் தி சேவியர் எனும் தலைப்பில் வாக்கத்தான் நடைபெற்றது.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இதனை, கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள்,செவிலியர்கள்,தொழில் நுட்ப வல்லுநர்கள்,மருந்தாளுனர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Be First to Comment