கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
கோவையில் மாநில அளவிலான தமிழ்நாடு ஓப்பன் கராத்தே சாம்பியன்சிப் போட்டி பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அலன் திலக் கராத்தே பள்ளி சார்பாக நடைபெற உள்ள இதன் துவக்க விழாவில் பி.எஸ்.ஜி.குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். விழாவில் கல்லூரி முதல்வர் பிரகாசன், பாலிடெக்னிக் முதல்வர் கிரிராஜ்,மற்றும் துறை தலைவர்கள் செந்தில் குமார்,அரசு,கிருஷ்ணம்மாள் கல்வி குழுமங்கள் நிர்வாக அறங்காவலர் கோபி குமார் மற்றும் கராத்தே சங்க நிர்வாகிகள் நீல் மோசஸ்,வெங்கட்,பால் விக்ரமன்,வீரமணி,சினுத்,பாலசுப்ரமணியம்,ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில்,தமிழகத்தின் மதுரை,கோவை,திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.ஜூனியர்,சப் ஜீனியர்,சீனியர் என பல்வேறு பிரிவுகளில் கட்டா,குமித்தே பிரிவுகளில் கராத்தே போட்டி நடைபெற்றது.இதில் தேர்வு செய்யப்பட உள்ள வீரர்,வீராங்கனைகள் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..
Be First to Comment