Press "Enter" to skip to content

கோவையில் முதல்வர் பங்கேற்கும் கண்காட்சி முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 19ஆம் தேதி கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில்,
“பொருநை” அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனைகள் ஓவியக்கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.

இதுதொடர்பான நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வ. உ. சி மைதானத்தில் அமைக்கப்பட்டுவரும் “பொருநை” அகழ்வாராய்ச்சி கண்காட்சி முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் , மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் ஆகியோர் முதல்வர் வரும் மைதானத்தை பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் பேசும்பொழுது..

19 ம் தேதி காலை முதல்வர் ஒன்பது முப்பது மணிக்கு வஉசி மைதானத்தில் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சி மற்றும் பொருநை அருங்காட்சியகத்தை
திறந்து வைக்கிறார்.

பிறகு 10 மணி அளவில் ரெசிடென்சி ஓட்டலில் தொழில் முனைவோர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரண்டு நிகழ்ச்சிகள் கோவை மாவட்டத்தில் நடைபெறுகிறது .

முதல்வர் வருகையையொட்டி 10 இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இன்று மாலைக்குள் இந்த பணிகள் முடிவடையும்.

அதற்கான சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சி பத்து நாட்கள் நடைபெறுகிறது. பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் இந்த புகைப்பட கண்காட்சியை காணலாம்” என தெரிவித்தார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks