முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு , அவர் சாதிய அடக்குமுறை பற்றி பேசிய வசனங்களை 30 அடி போஸ்டராக ஒட்டி கொண்டாடிய திமுக வினர்.
இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம் போன்ற பகுதிகளில் கருணாநிதி சாதிய அடக்குமுறை பற்றி பேசிய வசனமான “கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்” என்ற வரிகளை போஸ்டராக ஒட்டியுள்ளனர்.
ரயில் நிலையம், உக்கடம், போன்ற பகுதிகளில் இந்த போஸ்டரை சுமார் 30 அடி நீளத்திற்கு ஒட்டியுள்ளனர். பெரிய கடை வீதி பகுதி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் CMS மசூது, வர்த்தக அணி துணை அமைப்பாளர் அபுதாஹிர் ஆகியோர் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
இந்த 30 அடி நீள போஸ்டரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
Be First to Comment