கோவையில் முழு ஊரடங்கை ஒட்டி கோவையில் அவினாசி சாலை உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
பொதுமக்கள் ஆதரவுடன் அனைத்து கடைகளும் வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.
சாலைகளில் போலிசார் தடுப்புகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பால், பத்திரிகை, மற்றும் மருத்துவ சேவைக்காக வெளியே வருபவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுவருகிறது.
அவசியம் இல்லாமல் வெளியே வருபவர்களை போலிசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
Be First to Comment