கோவை வ.ஊ.சி. மைதானத்தில் ஆண்டுதோறும் தனியார் சார்பாக பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த கண்காட்சி நடைபெறவில்லை..இந்நிலையில் ஓம்சக்தி எண்டர்டெயிண்மென்ட் நிறுவனம் சார்பாக பிரம்மாண்ட பொருட்காட்சி வ.ஊ.சி.மைதானத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது..கோவை அதிசயம் லண்டன் கண்காட்சி எனும் இந்த கண்காட்சியில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து கண்காட்சி , உரிமையாளர் மணி,மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா,தினேஷ்,அப்துல் ரகுமான் கண்காணிப்பாளர் மனோகரன், மேலாளர் ராஜேந்திரன், உதவி மேலாளர் ரபீக்,ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்..

25 ஆம் தேதி துவங்கி சுமார் ஐம்பது நாட்கள் நடைபெற உள்ள இதில்,சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,.குறிப்பாக குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள்,வாட்டர் கேம்ஸ்,அம்யூசுமெண்ட் பார்க் ,வித விதமான ஊஞ்சல்கள்,போன்ற பல்வேறு குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் விதமான விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் ஒவ்வொரு மாவட்டத்தின் பிரத்யேக உணவு வகைகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன..

குறிப்பாக கண்காட்சி நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள லண்டன் மாதிரி அரங்குகள் லண்டன் வீதிகளை கண்முன்னே நிறுத்தும் விதமாக மிகுந்த பொருட்செலவில் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர்.. மூன்று ஆண்டுகள் இடைவெளியில் இந்த பொருட்காட்சி நடைபெறுவதால், கோவை மட்டுமின்றி அதன் சுற்றுப்புற மக்களை இந்த கண்காட்சி பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது…
Be First to Comment