கோவை காந்திபுரம் 7 – வது வீதி மொபைல் சொலியூசன் என்ற செல்போன் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், கடையில் இருந்த பொருட்களை விலை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் ப்ளூடூத் ஹெட்செட் வாங்குவது போல் அதை வாங்கி பார்த்து கொண்டு இருந்தார்.

பின்னர் அருகே மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மீது, அந்த அட்டைப் பெட்டியை வைத்து மறைத்து யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு அந்த செல்போனை எடுத்து செல்கிறார் இந்த சிசிடிவி காட்சிகள் கடையில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கடை ஊழியர்கள் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்போன் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வருகின்றனர்.
Be First to Comment