கோவையில் விடிய விடிய மழை, தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் – ஆணையாளர் பிரதாப் ஆய்வு.

கோவையில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இதனால், கோவை மாநகர பகுதிகளான சங்கனூர் ஓடையில் மழை வெள்ளம் ஓடியது. மேலும், அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியதால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கோவை இரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பாலத்தின் கீழும் வெள்ள நீர் தேங்கியது. இதில் ஒரு கார் சிக்கியது. பிறகு மீட்கப்பட்டது. இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மழையால் வெள்ள நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கூடுதலான மின் மோட்டார்கள் வரவைக்கப்பட்டு வெள்ளநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பகுதியில் விரைவில் வெள்ளநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ள நீர் விரைவாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
Be First to Comment