கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு.
வருகின்ற 12ந் தேதி முதல் 19 வரையில், கீழ்கண்ட அலுவலகங்களில் அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிவாரியாக வேட்புமனு பெறப்படும் இடங்கள் :
கிணத்துக்கடவு : மதுக்கரை தாலூக அலுவலகம்
தொண்டாமுத்தூர் : தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மேட்டுப்பாளையம், சூலூர் – அங்கு உள்ள தாலூகா அலுவலகம்
கவுண்டம்பாளையம் : மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
கோவை வடக்கு : வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையத்தில் அமைந்துள்ள தேர்தல் அதிகாரி அலுவலகம்
கோவை தெற்கு : மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம்.
சிங்காநல்லூர் : மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம்
பொள்ளாச்சி : சார் ஆட்சியர் அலுவலகம்
வால்பாறை : ஆனைமலை தாலூகா அலுவலகம்
Be First to Comment