கோவையில் 7 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் கோவை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த பணங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மதுக்கரை மார்க்கெட், ஸ்ரீ ராம் விலாஸ், பகுதியில் தொடர்ச்சியான வீடுகள் உள்ளன. அங்கு வசிப்பவர் ரவிக்குமார் லாட்ஜ் உரிமையாளர். ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி மேலாளர். வெங்கட் ஓய்வு பெற்ற சாப்ட்வேர் இன்ஜினியர். உட்பட 7 வீடுகளில் அனைவரும் வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தன. இதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டினுடைய பின்பக்க கதவை உடைத்து வீட்டின் கீழ் தளத்திற்கு சென்று பீரோவில் உள்ள பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கைரேகை நிபுணர்கள் வந்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. மொத்தம் எவ்வளவு திருடப்பட்டு உள்ளது. என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் 7 வீடுகளில் தொடர் கொள்ளை: சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment