கோவை சூலூரில் துவங்கப்பட்டுள்ள ஆட்டுக்கறி கடையில் கறி வாங்கினால், குடம் மற்றும் தேங்காய் இலவசம் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கோவை சூலூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் “அம்மா அப்பா” என்ற பெயரில் ஆட்டு கறிக்கடை துவங்கப்பட்டுள்ளது.
இந்த கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் தென்மாவட்டங்களில் செய்வது போன்று ஆட்டுக்கறி வாங்கினால் குடம் மற்றும் தேங்காய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதனால் இந்த கடையில் கறிவாங்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் ஒரு கிலோ ஆட்டுக்கறி 560 ரூபாய்க்கும், தலைக்கறி 180 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Be First to Comment