கோவையை இந்தியாவின் பிரதானமான முதலீடு மற்றும் வியாபாரத் தளமாக மாற்ற, இந்திய தொழில் கூட்டமைப்பு ( சி.ஐ.ஐ ) சார்பில் கோயம்புத்தூர் நெஸ்ட்டு (NXT) திட்டம் துவக்க நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சிஐஐ அலுவலகத்தில் நடைபெற்றது.பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சிஐஐ கோவை மண்டலத்தின் தலைவர் பிரசாந்த்,கோயம்புத்தூர் நெஸ்ட்டு NXT மூலம், கோவையை இந்தியாவின் பொருளாதார தளமாக மாற்ற வேண்டும் என்பதே சிஐஐ- யின் நோக்கமாகும்.மேலும் நெஸ்ட்டு மூலம், நகரத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் கூட்டாக இணைந்து பணியாற்றி, சிஐஐ புதிய நம்பிக்கைகளை விதைக்கவும், வழிகாட்டவும் மற்றும் அவர்களை உலக அளவில் வணிகம் செய்ய தயார் படுத்தவும், உள்ளூர் தொழில்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.

வித்தியாசமான முறையில், கோவை நெஸ்ட்டு ஆனது, உலகம் முழுவதிலுமிருந்து முதலீடுகளை ஈர்த்து பாரம்பரிய மற்றும் வளர்ந்து வரும் துறைகள் மற்றும் துடிப்பான ஸ்டார்ட்-அப் சூழலை வளர்ப்பதற்கும் முயற்சி செய்கிறது. இந்த வெளியீட்டு நிகழ்வில் தொழில்துறையில் உள்ள பிரபலங்களின் முதன்மை வகுப்புகள் உள்ளிட்ட சில முக்கிய கூறுகள் இடம்பெறும் என்று குறிப்பிட்டார். கோவை மண்டலத்தின் முன்னாள் தலைவரும், எஃபிகா ஆட்டோமேஷன் முழு நேர இயக்குநருமான அர்ஜுன் பிரகாஷ், கூறுகையில் கோயம்புத்தூர் நெஸ்ட்டு என்பது, எங்கள் பிராந்தியம் வெளி உலகிற்கு தன்னை வெளிப்படுத்துவதற்கான ஒரு தொடர்ச்சியான மற்றும் முற்போக்கான, பல ஆண்டு முன்முயற்சியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
Be First to Comment