கோவை அரசு கலை கல்லூரி ஆசிரியர் விவகாரம்- ஆசிரியர் மீது தவறில்லை எனவும், முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென கூறி, கல்லூரி மாணவிகள், பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா.

கோவை அரசு கலை கல்லூரியில் தமிழ் பேராசியராக பணியாற்றி வந்த ரமேஷ் என்ற ஆசிரியர் மீது, சில மாதங்களுக்கு முன் சக ஆசிரியர்கள் சிலர் பல்வேறு புகார்களை தெரிவித்ததை தொடர்ந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் தற்பொழுது கோவை அரசு கலைக் கல்லூரிக்கு ஆசிரியராக பணியமடுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று அந்த ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி சில ஆசிரியர்கள் அரசு கலை கல்லூரியில் போராட்டம் மேற்கொண்டனர். அதேசமயம் அவர் மீது எவ்வித தவறும் இல்லை எனக் கூறி சில மாணவிகள் அதே இடத்தில் போராட்டம் மேற்கொண்டனர். பின்பு கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதை தொடர்ந்து போராட்டமானது கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆசிரியர் ரமேஷ் மீது எவ்வித தவறும் இல்லை எனக் கூறி மாணவிகள் நான்கைந்து பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற பதாகைகளையும் ஏந்தியவாறு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஒரு மாணவியின் தாயாரும் தர்ணாவில் ஈடுப்பட்டார்.

அதனை தொடர்ந்து காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் சந்திக்க அழைத்த பொழுதும் மாணவிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து எங்களை சந்திக்க வேண்டும் என கூறி தர்ணாவை தொடர்ந்தனர். அதனை தொடர்ந்து நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்கு ஒப்புக்கொண்ட மாணவிகள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Be First to Comment