கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை கரிவரத ராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.5.7 கோடி மதிப்புள்ள, வணிகவளாக கட்டடங்களை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். கோவை, உக்கடம் கோட்டை மேடு பகுதியிலுள்ள, கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்த மான, வணிக வளாகக் கட்டிடம் மற்றும் குடியிருப்பு, நீண்ட நாள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்பு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு அருகே, கோட்டை, நாஸ் தியேட்டர் சாலையில் உள்ள, ரூ.5.70 கோடி மதிப்புள்ள 7.12 சென்ட் வணிக வளாக கட்டிடம் மற்றும் குடியிருப்பை மீட்டனர். இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி, கோவில் தக்கார் செல்வம் பெரியசாமி, செயல் அலுவலர் சரவணக்குமார், செயல் அலுவலர்கள் வெற்றிச்செல்வன், பாண்டியராஜ், நாகராஜ், அறநிலையத்துறை ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் கொண்ட குழு போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதற்கான அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டது.
Be First to Comment