கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பாக, பல்வேறு வகையான சமுதாய பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் ஆண்டு விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவிகள் வழங்கும் விழா வடவள்ளியில் உள்ள கோகுலம் சேவாஸ்ரமம் இல்லத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் குழந்தைகளுக்கு தேவையான புத்தாடைகள், அரிசி, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப்பொருட்கள், காய்கறிகள், பிஸ்கட், பிரட், கீளினிங் மாப் மற்றும் பட்டாசுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மேலும் கோவையை ஒட்டி அமைந்துள்ள உதவும் கரங்கள், அரவணைக்கும் அன்பு இல்லம், செஷயர் இல்லம், பாரதியார் குருகுலம், சமாதானம் முதுமக்கள் மனை உள்ளிட்ட இல்லங்களுக்கும் இதேபோல உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிர்வாக அறங்காவலர் கெளரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ராஜா, கார்த்திக் ,இளங்கோ ,கமலக்கண்ணன் ,ரமேஷ், பிரவீன், சிக்கந்தர் பாட்சா ,ராஜேஷ், சக்தி மாதவன், ஷ்யாம், பாரதி ,மணி,சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்…
Be First to Comment