கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட என்.சி.சி மாணவர்களுக்கு குரூப் சி எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
கோவை , நீலகிரி, உடுமலைப்பேட்டை போன்ற பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குரூப் சி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. செய்முறைத் தேர்வில் துப்பாக்கி கையாளுதல் போன்ற பயிற்சி ஆளுமைத்திறன் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் ஆய்வு செய்யப்பட்டன மற்றும் எழுத்துத் தேர்வும் நடந்தது, பல்வேறு கல்லூரியின் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை குரூப் என்.சி.சி குரூப் கமாண்டர் கர்னல் நாயுடு தேர்வு குறித்து ஆய்வு செய்தார். 4 தமிழ்நாடு பட்டாலியன் என்சிசி தமயன்டி அலுவலர் சவுகான், 5வது மகளிர் பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் கா்னல் ஜோஷி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Be First to Comment