கோவை குனியமுத்தூரில் 5 கே கார் கேரின் 75வது புதிய கிளை துவக்கம்

தென்னிந்தியாவில் கார் சர்வீஸில் தனக்கென தனி முத்திரை பதித்து 102 கிளைகளுடன் இயங்கி வரும் 5 கே கார் நிறுவனம்,தமிழக அளவில் தனது 75 வது கிளையை
கோவை குனியமுத்தூரில் துவக்கியது.இதற்கான விழாவில், சிறப்பு விருந்தினர்களாக 5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. கார்த்திக்குமார் சின்ராஜ், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி முதன்மை செயல் அதிகாரி கே. சுந்தர்ராமன், குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன், கஸ்டம்ஸ் சூப்பரண்ட்கள் சின்னசாமி, மணிமோகன்
, சக்தி ஏஜென்சி உரிமையாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மில்லர் எண்டர்பிரைஸ் உரிமையாளரும், குனியமுத்தூர் 5 கே கார் கேர் கிளையின் உரிமையாளருமான சிந்துஜா அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து 5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக்குமார் சின்ராஜ் கூறுகையில், கொரோனா காலத்தில் சுமார் ஒரு லட்சம் கார்களுக்கு சானிடைசர் செய்துள்ளோம்.குறிப்பாக கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய கார்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று எடுத்து வந்து காரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அவர்களது இடத்திற்கே காரை நிறுத்தும் பிக் அப் ட்ராப் சர்வீஸ் வசதிகள் செய்துள்ளதாக தெரிவித்தார். இதில் கொரோனா காலத்தில் சேவையாற்றிய மருத்துவர்கள் மற்றும் பிற துறை அதிகாரிகளின் கார்களும் சர்வீஸ் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
யு.வி ப்ரொடக்சன், கிளாஸ் பாலீஸ் உள்ளிட்ட 65 வகையான சேவைகள் ஜெர்மன் தொழில்நுட்ப கருவிகள் மூலம் செய்யப்படுகிறது. இளைஞர்களுக்கு புதிய கிளைகள் திறப்பின் மூலம் வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறோம். தற்போது ரூ.5,499 மதிப்புள்ள கார் சர்வீஸ் வெறும் 499 ரூபாய்க்கு செய்து தரப்படுகிறது என்றார்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *