குறிச்சி 99வது வார்டில் உள்ள புனித மேரி மருத்துவமனையிலும், செவிலியர் மடத்திலும் பணிபுரியும் சிஸ்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் கோவை மாமன்ற உறுப்பினர்கள் 100வது வார்டு கார்திகேயன், 99வது வார்டு மு.அஸ்லம் பாஷா, 96வது வார்டு குணசேகரன், கோவை மாநகராட்சி துனை மேயர் வெற்றிசெல்வன் கலந்து கொண்டனர்.

பொறுப்பாளர் முஹம்மது ஜின்னா, முரளி, பிலிப் ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா தலைமை தாங்கினார், துனை மேயர் வெற்றிசெல்வன் இந்த முகாமினை துவங்கி வைத்தார்.
Be First to Comment