கொரோனா காரணமாக கோவை அருகே உள்ள கோவை குற்றாலம் சுற்றுலா மையம் மூடப்பட்டு இருந்தது.
அரசு வழிகாட்டுதலின்படி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 6ந் தேதி முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன.
இதனால் கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து காணப்பட்டது.
கோவை குற்றாலத்துக்கும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், கோவை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இயலாத நிலை உள்ளது.
எனவே பாதுகாப்பு கருதி கோவை குற்றாலத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 4 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment