கடந்த சில நாட்களாக கோவையில் அதிகரித்து வந்த கொரோனா பரவலால், கோவையில் பிரதான சுற்றுலாத்தலமாக உள்ள கோவை குற்றாலத்திற்கு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்த நிலையில் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளை முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அதன் படி ,சில கட்டுப்பாடுகளுடன் முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும்,மேலும் முன்பதிவு செய்பவர்களுக்கென ஒதுக்கப்படும் நேரத்தில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
குறிப்பாக ,பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை சான்று அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று வைத்திருக்கவேண்டும், முகக் கவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும், சுற்றுலா பயணிகள் தங்களது – செல்போனில் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம், சனி, ஞாயிறு தினங்களில் பயணிகள் அனுமதி இல்லை போன்ற கடும் கட்டுப்பாடுகளுடனே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை குற்றாலம்: சுற்றுலா பயணிகள் முன்பதிவு அடிப்படையில் அனுமதி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment