மத்திய நீர்வளத்துறை வழங்கும் “நீர் காவலர்” விருதிற்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தேர்வாகியுள்ளது.
நீர்நிலைகளை பாதுகாக்க பணிபுரிபவர்களுக்கு புது டெல்லியில் “நீர் காவலர்” விருது வழங்கப்படவுள்ளது. உலக நாடுகள் முழுவதும் செனகலில் நடந்த உலக நீருக்கான உச்சி மாநாட்டில் தண்ணீருக்காக உருவாகியுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்கும் போது, நமது இந்தியாவில் நீர் தன்னிறைவு பெற, மார்ச் மாதம் விவாதம் நடத்தப்படுகிறது.
வரும் மார்ச் 30, 2022 தேசிய தலைநகர், புது தில்லியில் “தண்ணீர் தன்னிறைவு, இந்தியாவின் முயற்சிகள் மற்றும் சவால்கள் ” என்ற தலைப்பில் ‘தண்ணீர் மனிதன்’ ஸ்ரீ ராஜேந்திர சிங், இந்தியாவின் நீர் காவலர்களுடன் ஜல் சக்தி அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் விவாதிக்கவுள்ளார்.

ஜல் பிரஹாரி சம்மான்-2022 நிகழ்வு, நாடு முழுவதும் உள்ள நீர் வீரர்களை கவுரவிக்கும் நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சியை Sarkaritel.com ஜல் சக்தி மற்றும் ஜல் ஜீவன் மிஷன் அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்கிறது. இது குறித்து துறையின் தலைமை நிர்வாக அதிகாரி அமேய சத்யே கூறியதாவது –
இந்த ஆண்டு தனிநபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு துறையினரை உள்ளடக்கிய சுமார் 20 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், லடாக், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, புது தில்லி, பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட், கலந்து கொள்வார்கள். மேலும் ஜல் பிரஹாரி சமரோவின் ஒருங்கிணைப்பாளர் அனில் சிங், ” விழாவில் பங்கேற்கவுள்ள நீர் காவலர்களின் புதுமையான யுத்திகள், தொழில்நுட்பங்கள், அவர்கள் சந்தித்து வரும் சவால்கள், பாரம்பரிய முறைகள் இதன் மூலம் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை சேமிக்கின்றனர். இதன் மூலம் அனைவரும் பயனடைய முடியும்.” என்றார்
”விவசாயிகள், விஞ்ஞானிகள், ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பெயர்கள் கூட இந்த நீர் வீரர்களில் பட்டியலில் அடங்குவர். இந்த ஆண்டு முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் மாநிலங்களவை எம்.பி.,ரஞ்சன் கோகாய் தலைமையிலான தேர்வுக் குழுவினர் சிறந்த நீர் காவலர்களை தேர்வு செய்தனர்.
இந்த விழாவில் டெல்லி எம்.பி மனோஜ் திவாரி, ராஜ்யசபா மற்றும் எம்.பி விஜய் பால் சிங் தோமர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
Be First to Comment