கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் சி எஸ் ஐ திருமண்டல அலுவலகம் உள்ளது. இதன் நிர்வாக குழு கூட்டம் இன்று அதே பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் சி.எஸ்.ஐ திருமண்டல ஆயர் திமோதி ரவீந்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நிர்வாகக் குழுவில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர் வக்கீல் நேசமெர்லின் புகார் அளித்தார். அப்போது அங்கு இருதரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பினர் வக்கீல் நேச மெர்லின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் தலை மற்றும் கை கால்களில் ரத்த காயங்களுடன் வக்கீல் நேச மெர்லின் கூட்டம் நடைபெற்ற இடத்தை விட்டு வெளியே ஓடிவந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது..இந்நிலையில் வழக்கறிஞர் நேசமெர்லின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,ரெவரென்ட் சார்லஸ் சாம்ராஜ் செய்த மோசடி குறித்து கேள்வி எழுப்பிய போது அவரும் அவருடைய கூட்டாளிகளான ஜேக்கப்,பரமானந்தம் உள்ளிட்ட சிலர் தம் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறிய அவர், இது குறித்து வழக்கறிஞர் நேசமெர்லின் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் போலீசார் சிஎஸ்.ஐ திருமண்டல நிர்வாக கமிட்டி பாதிரியார். சார்லஸ் சாம்ராஜ், சுதன் அப்பாதுரை, பாக்கியராஜ், டியூக் பொன்ராஜ், டேனியல், பரமானந்தம், எஸ்.என்.ஜேக்கப், டிஜின் பெர்னார்டு,நெல்சன், பாதிரியார் வில்சன், விஜய், மேத்யூ ,ஜெயராஜ் ,ஜே.பி ஜேக்கப், அருள் பிரவீன் ஆகியோர் மீது சட்டவிரோதமாக கூடுதல் கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தேடி வருகிறார். இந்த மோதல் தொடர்பாக சி.எஸ்.ஐ ஆலய செயலாளர் ஜே. பி. ஜேக்கப் ( 73) கொடுத்த புகாரின் பேரில் பிரதிநிதி மெர்லின், அமிர்தம் ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Be First to Comment