கோவை கிழக்கு மாவட்டம், சூலூர் மேற்கு ஒன்றியம் மற்றும் சூலூர் நகர தி.மு.க சார்பில், அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும், உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்தும் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளரும், தலைமைக் கழக பேச்சாளருமான தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்விற்கு கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமை தாங்கினார். சூலூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் த.மன்னவன் வரவேற்புரையாற்றினார். தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் கருமத்தம்பட்டி நகராட்சி மன்ற தலைவர் நித்தியா மனோகர், தளபதி முருகேசன், சன் ஆ.ராஜேந்திரன், பி.வி.மகாலிங்கம், முத்து மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து அணி சார்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் நகர பொறுப்பாளர் சோலை ப.கணேசு நன்றியுரை கூறினார்.
Be First to Comment