நவராத்திரி உத்சவ விழாவை முன்னிட்டு கோவை நடராஜா கலாக்சேத்ரா சார்பாக பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
நவராத்திரி உத்சவ விழா மற்றும் ஜீவா நகர் நடராஜா கலாகேத்ரா நடன பள்ளியின் ஐந்தாவது ஆண்டு விழா கோவை சேரன்மாநகர் பகுதியில் உள்ள வியாசர் ஆன்மீக மைய அரங்கில் நடைபெற்றது.
நடன பள்ளியின் இயக்குனரும் ஆசிரியைமான நயனா அனில் தலைமையில் நடைபெற்ற விழாவில் வியாசர் ஆன்மீக மையத்தின் நிறுவனர் அரிமா கோபால்சாமி,கோவை வியாசர் அரிமா சங்க தலைவர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பரத கலா மந்திர் இயக்குனர் முனைவர் இந்துமதி சாம் குமார் கலந்து கொண்டார். விழாவில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பரதநாட்டியம் ஆடி அசத்தினர். முன்னதாக நாட்டிய பள்ளி இயக்குனர் நயனா அனில் கூறுகையில், பாரம்பர்ய கலைகளான பரத நாட்டிய கலையை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவும், இந்த நடனக் கலைகள் அழியாமல் பாதுகாத்துக்கொள்ளவும், தொடர்ந்து இளம் தலைமுறையினர் பரதநாட்டிய கலையை கற்று கொள்ள ஆர்வமுடன் வர வேண்டும் எனவும், இந்தக் கலைகளை நாம் போற்றப்பட வேண்டும், மிகவும் கடினமான நடனத்தால் உடல் ஆரோக்கியம் பெறும்; மனம் ஒருநிலைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Be First to Comment