மாணவர்கள் பள்ளியில் பயிலும் போதே, தங்களது தலைமை பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும் என கோவை ஆர்.எஸ்.புரம் நேரு வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீநேரு வித்யாலயா பள்ளியில் மாணவர் பாராளுமன்ற துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோவை நலச்சங்க தலைவர் மகாவீர் போத்ரா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,மாணவ,மாணவிகள் பள்ளியில் படிக்கும் போதே தலைமை பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும், உலக அளவில் அகிம்சையை போதித்த மகாத்மாவின் வரலாற்றை ஒவ்வொரு மாணவ,மாணவிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்..

நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அமைச்சர்களாக பதவியேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில், பள்ளியின் துணைத் தலைவர் கமலேஷ் பாப்னா, பள்ளியின் செயலாளர் நிஷாந்த் ஜெயின், துணைச் செயலாளர் ரதன் போத்ரா, பொருளாளர் அசோக் லூனியா மற்றும் பல பிரமுகர்கள் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி முதல்வர் திருமதி பங்கஜ் அனைவரையும் வரவேற்றார்.தொடர்ந்து மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது….
Be First to Comment