“பிஷப் அப்பசாமி” கல்லூரியின் சமூக பணித்துறை இறுதி வருட மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி, சரவணம்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது.சமூக வலைதளங்களால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இதில்,, சிறப்பு விருந்தினர்களாக சரவணம்பட்டி காவல் துறை உதவி ஆய்வாளர் மஹாலிங்கம் ,சமூக சேவகி , திருமதி. ஜெயலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.,இந்த நிகழ்ச்சியில், “social media addiction” என்ற தலைப்பில் வரைய பட்ட ஓவியங்கங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.

காவல் துறை அதிகாரி “social media addiction” ஆவதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் வரும் குற்றங்கள் குறித்தும் பேசினார். துறை பேராசிரியர் பிரேமா மாலினி அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் திருமதி. ஜெயலின் பேசுகையில், நல்லதொரு வாழ்க்கைக்கு கைபேசி முக்கியம் இல்லை, கையேடே முக்கியம் என்பதனை எடுத்துரைத்தார். மற்றும் சமூக பணி மாணவர்கள், விழிப்புணர்வு பாடல் மற்றும் விழிப்புணர்வு நாடகங்கள், விழிப்புணர்வு கவிதைகளை, நடத்தினர். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி தலைமையாசிரியர் நன்றியுரை வழங்கினார்..
Be First to Comment