பள்ளி கல்லூரிகளுக்கு ஆண்டு விடுமுறை முடிந்து, 2022 – 2023 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

அதன்படி, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், மாநகர போக்குவரத்துத் துணை ஆணையர் மதிவாணன் மேற்பார்வையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் அவிநாசி சாலையில் உள்ள பிஆர்எஸ் மைதானத்தில் தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பேருந்தின் பாதுகாப்பு அம்சம், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, அவசரகால வழி, உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

கோவையில் 230 பள்ளிகளைச் சேர்ந்த 1265 பேருந்துகள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளன. மேலும் அங்கேயே தனியார் மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சில பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது வரவேற்கத்தக்கதாக அமைந்தது.
Be First to Comment