கோவை மாநகர் மகளிர் காங்கிரஸ் சார்பாக பெட்ரோல் டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ரயில் நிலையம் முன்பு விறகு அடுப்புடன் சமையல் செய்து விநோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் முன்பும் பல்வேறு போராட்டங்கள் காங்கிரஸ் சார்பாக நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவித்திருந்தார். அதன் படி கோவை மாநகர் மகளிர் காங்கிரஸ் சார்பாக ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் கட்சி மகளிர் அமைப்பினர், விறகு அடுப்புடன் கேஸ் விலையை கண்டித்து மத்திய அரசை கண்டித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இதில் பெட்ரோல்,டீசல் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பபட்டது.
Be First to Comment