கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 20 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்த 2-வது நுழைவு வாயில் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு 2-நுழைவு வாயில்கள் உண்டு .இதில் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து செல்ல பிரதான நுழைவு வாயிலை போலீஸ் அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்தனர்.

கோவையில் நடந்த சில சம்பவத்தினால் இரண்டாவது நுழைவு வாயில் பயன்படுத்தாமல் மூடிக் கிடந்தது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கமிஷனர் பாலகிருஷ்ணன் அலுவலகத்தை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கமிஷனர் அலுவலகத்தின் இரண்டாவது நுழைவு வாயிலைத் திறக்க உத்தரவிட்டார்.
இதன்படி நேற்று முதல் 2-வது நுழைவாயில் கேட் திறக்கப்பட்டு வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டது. அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் “பிரதான நுழைவு வாயிலை போலீஸ் அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்துவார்கள். பார்வையாளர்கள் மற்றவர்கள் இரண்டாவது நுழைவு கேட்டை பயன்படுத்த வேண்டும்” என்றனர்.
Be First to Comment