கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், திமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டார். இதையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, அவர் பேசுகையில்;-

திமுக தலைவர், தமிழக முதல்வர், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரின் ஆசியுடன் இந்த பொறுப்பை ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மதவாத சக்திகள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி தமிழகத்தில் வளர நினைக்கின்றது. அது ஒருகாலும் முடியாது. வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியடையும் என கூறினார்.

இந்த நிகழ்வில், மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார், மற்றும் புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கரகாட்டம், பொய்கால் குதிரையாட்டம்,மேளதாளம் முழங்க பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Be First to Comment