கோவை மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கம் (CODCEA)வின் மாதாந்திர கூட்டம் மற்றும் தொழில்நுட்ப கலந்தாய்வு கூட்டம், கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கோட்சியாவின் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். மேலும் சிறப்பு விருந்தினர் பொறியாளர் பொறி.எஸ் ராமராஜ் அவர்கள் “குடியிருப்பு கட்டிடத்திற்கான அடிப்படை வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு'” பற்றி சிறப்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் செயலாளர், பொருளாளர் , உதவித்தலைவர் , இணைச் செயலாளர், இணைப் பொருளாளர், அலுவலக நிர்வாகி, மக்கள் தொடர்பு அலுவலர் , செயற்குழு உறுப்பினர் , மற்றும் கோட்சியாவின் நிர்வாகக்குழு, கோர் கமிட்டி, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு கோவை சிமெண்ட் நிறுவனத்தார் ஏற்பாடு செய்தனர். இறுதியில் உதவி பொருளாளர் நன்றியுரை ஆற்றினார்.
Be First to Comment