Press "Enter" to skip to content

கோவை மாவட்டம் அ.தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பாக அணைத்து இடங்களிலும் தி.மு.க-வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் கொண்டுவரபட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலை கழகத்தை தி.மு.க முடக்கும் நோக்குடன் செயல்படுவதாக, அதனை கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் எதிர்கட்சி கொறாடா முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.
மேலும் தி.மு.க அரசை கண்டித்தும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்தை ரத்து செய்யும் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்த தி.மு.க அரசை கண்டித்து கோவை குனியமுத்தூர் பகுதியில் அ.தி.மு.க பகுதி கழக செயலாளர் மதனகோபால் தலைமையில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கோவை பூமார்க்கெட், காந்திபுரம், கோவைபுதூர் உட்பட மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் அ.தி.மு.க-வினர் ஈடுபட்டனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks