கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இன்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் முதலில் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.


தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்களும் முன் களப்பணியாளர்கள் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும் முன் களப்பணியாளர்கள் பெறும் அனைத்து சலுகைகளையும் செய்தியாளர்களும் பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், இன்று கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கும் 45 வயது நிரம்பிய அவர்களது குடும்பத்தாருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. சுமார் 150 பேர் இதில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த சிறப்பு முகாமக் கோவை பத்திரிகையாளர் மன்றம் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Be First to Comment